அஷ்ட கர்ம செயல்களுக்கான உலோகங்கள்

அஷ்ட கர்ம செயல்களுக்கான உலோகங்கள் :

சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த உலோகங்களில் எந்திரங்கள் எழுதி அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். 

இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு உலோகங்களில் எந்திரங்களை எழுதி மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். 

பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். 

சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான எந்திரங்களை எந்த உலோகங்களில் எழுதினால் ஜெயம்தரும் என்று பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்கள் மற்றும் அந்த எந்திரங்கள் எழுதவேண்டிய உலோகங்கள் :

1. வசியம் - காரீயம்

2. தம்பனம் - செம்பு

3. மோகனம் - வங்கம்

4. உச்சாடனம் - வெள்ளீயம்

5. பேதனம் - இரும்பு

6. ஆகர்ஷணம் - தங்கம்

7. வித்வேஷனம் - குருத்து ஓலை

8. மாரணம் - வெள்ளி 

மேலே சொல்லிய உலோகங்களில் அந்தந்த காரியங்களுக்கு உண்டான எந்திரங்களை வரைந்து மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

© சித்தர்கள் உலகம்